தமிழ் சினிமாவில் ஆறு வருடங்களாக பிரச்சனையை அமைதியாக சமாளித்த நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் ஆறு வருடங்களாக பிரச்சனையை அமைதியாக சமாளித்த நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் விஜய் இன்று பாக்ஸ் ஆஃபிஸ் மன்னனாக இருப்பதற்கு அவர் எவ்வளவு விசயங்களை சமாளித்திருப்பார் என்பது அவரும், அவரது ரசிகர்களும் மறக்க மாட்டார்கள்.

கடந்த 6 வருடங்களாக தொடர்ந்து இவரது படங்கள் சர்ச்சைகளையும் சிக்கல்களையும் சந்தித்து வந்தது. சில படங்கள் சவாலாவும் இருந்துள்ளது. இது பற்றி ஒரு சிறுபார்வை விடுவோம்.

காவலன் 2011
விஜய் அசின் நடிப்பில் சித்திக் இயக்க காவலன் வெளிவந்தது. ஆனால் அதற்கு முன்பு விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து முந்தைய படங்களின் நஷ்டத்தால் சற்று அழுத்தம் தரப்பட்டது.

ஆனால் ரிலீஸாகும் முதல் நாள் எல்லோருக்கும் தன் பாக்கெட்டிலிருந்து பணத்தை செட்டில் செய்வதாக உறுதியளித்தார் விஜய். பின் படம் வெளியானதால் ஓரளவு ஹிட்டானது.

துப்பாக்கி 2012
ரிலிஸ் குறித்த சர்ச்சைகள் எதுவும் இல்லாத நிலையிலும் படம் வெளியான பிறகு முஸ்லீம்கள் இப்படத்தில் தீவிரவாதிகள் என தவறாக சொல்லப்பட்டதாக சர்ச்சையானது. பின் படக்குழு தமிழக அரசின் உதவியுடன் பிரச்சனையை சரி செய்தது. ஆனால் படம் என்னவோ பிளாக் பஸ்டர் ஹிட் தான்.

தலைவா 2013
தலைவா என்ற பெயருகேற்றால் போல் Time to lead என்ற வசனத்தால் சில சிக்கல்களை சந்தித்தது. இது விஜய்யின் அரசியல் வருகையோ என அவரின் அச்சாரத்திற்கு அப்போதே தடை போட்டார்கள். நீண்ட நாளாய் தள்ளிப்போய் கடைசியில் ஒருவழியாக ரிலீஸானது.

கத்தி 2014
முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் கத்தி. படம் குறித்து எந்த பிரச்சனை இல்லாமல் இருந்தாலும் அந்நேரத்தில் தயாரிப்பு நிறுவனம் இலங்கை தமிழீழ பிரச்சனையால் சர்ச்சைக்குள்ளானது. படம் கேள்விக்குறியாக இருந்த நிலையில் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு வெளியானது.

புலி 2015
புலி படம் எப்படியான நிலைக்கு ஆளானது என்பது சினிமா வட்டாரங்கள் நன்கு அறியும். படத்திற்கு தயாரிப்பாளர்கள் தரப்பில் பணப்பிரச்சனை அதோடு வருமான வரி துறையின் அதிரடி சோதனை என படத்திற்கு பெரும் முட்டுக்கட்டை விழுந்தது. படமும் தோல்வியை தழுவியது.

தெறி 2016
அட்லீ இயக்கத்தில் உலகின் பல இடங்களில் வெளியான தெறி வினியோகஸ்தர்களின் பிரச்சனையால் உள்ளூரான செங்கல்பட்டில் வெளியாகவில்லை.

மெர்சல் 2017
படம் வெளியானதுமே அரசியல் சர்ச்சைகள். ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா குறித்த காட்சிகள் சர்ச்சையானது. அதே போல விலங்குகள், பறவைகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டது.

ஆனாலும் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி ரூ 250 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]