தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் இலங்கைப் போக்குவரத்து சபை

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு பூராகவும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை இலங்கைப் போக்குவரத்து சபை மேற்கொண்டுள்ளது.

கொழும்பில் இருந்தும், நாட்டின் பிரதான நகரங்களில் இருந்தும் விசேட பஸ்கள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் நலன்கருதி கடந்த 7ஆம் திகதி முதல் மேலதிக பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த மேலதிக பஸ்சேவை எதிர்வரும் 14ஆம் திகதி வரை இடம்பெறும் என்று இலங்கைப் போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்கள

கொழும்பு புறக்கோட்டை பிரதான பஸ் நிலையத்திலிருந்து மேலதிகமாக 3900 பஸ்பயணங்கள் இடம்பெறவிருக்கின்றன. சொந்த இடங்களிலிருந்து பிரதான நகரங்களுக்கு திரும்பும் மக்களின் நலன்கருதி எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை மேலதிக பஸ் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இலங்கைப் போக்குவரத்து சபையின் சாரதிகள், நடத்துனர்கள் உட்பட அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ளவர்களின் விடுமுறைகளும் புத்தாண்டு காலப்பகுதியில் ரத்துசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிவிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொழும்பில் இருந்து விசேட ரயில் போக்குவரத்துகளும் ஒழுங்குச் செயப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. புதுவருடத்தை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் நலன்கருதி மேலதிக ரயில் சேவைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]