தமிழ் கொலையா?? – அரச கரும மொழிச் சட்டம் மீறப்பட்டால் அறிவிக்கவும்

இலங்கையின் அரச கரும மொழிச் சட்டம் மீறப்பட்டால் உடனடியாக அதுபற்றி அறிவிக்குமாறு தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அரச கரும மொழிகள் அமைச்சு பொதுமக்களைக் கேட்டுள்ளது.

அரச கரும மொழிகள் அமுலாக்கல் தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அரச கரும மொழிகள் அமைச்சின் இன்னொரு சேவையாக அரச கரும மொழிகள் அமுலாக்கப்படுவதனை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு பொது மக்களின் அவதானம் வேண்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் அரச கரும மொழிச் சட்டம் மீறப்படுகின்றதா? தமிழ் மொழியில் எழுதப்படவில்லையா? தமிழ் மொழி தவறாக எழுதப்பட்டுள்ளதா? அதுபற்றி உடன் அமைச்சுக்கு அறிவிக்கவும்.

துரித தொலைபேசி இலக்கம் 1956, வட்ஸ்அப், வைபர் மற்றும் இமோ ஆகியவற்றுக்காக 071 485 473 4 ஆகிய இலக்கத்தோடு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் முகநூல் முகவரி www.facebook.com/languageRIGHTS/ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கொலையா??

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]