தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்தக் கூட்டம்

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்தக் கூட்டம், நாளை 7ஆம் திகதி காலை 9.30 மணிக்கு, கொழும்புத் தமிழ்ச்சங்க மாலதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி ஒன்றியத்தின் செயற்பாடுகள், புதிய நிர்வாகிகள் தெரிவு உட்பட பலதரப்பட்ட விடயங்கள், இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.

இக்கூட்டத்தில், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டு, தங்களது பங்களிப்பை வழங்குமாறு, ஒன்றியத்தின் ஏற்பாட்டுக் குழு கேட்டுக்கொள்கின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]