தமிழ் இளைஞர் ஒருவரை தாக்க முயற்சித்த மர்மநபர்கள் – அக்கரைப்பற்றில் பதற்றம்!!

அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள், அங்கு வந்த தமிழ் இளைஞர் ஒருவரை தாக்க முயற்சித்தததையடுத்து, அந்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நிலைமையினை சரி செய்யும் நோக்கில் சமூக முக்கியஸ்தர்கள் சமரச முயற்சியில் ஈடுபட்டதாக பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி – திகன பகுதியில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தை கண்டித்து, காத்தான்குடி, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை உள்ளிட்ட பகுதிகளில் முழுமையான கடையடைப்பு இன்று நடத்தப்பட்டது.

இதன்போது, அக்கரைப்பற்றில் ஊர்வலமாக வந்தவர்கள், அங்கு வந்த தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கவே அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த இடத்திற்கு இராணுவத்தினர் விரைந்ததாகவும், இதனால், அந்த பகுதியில் சற்று பதற்றமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அட்டப்பள்ளம் என்னும் இடத்தில் இந்துக்களின் மயானம் ஒன்றை முஸ்லிம் ஒருவர் ஆக்கிரமித்ததாக கூறப்படும் பிரச்சினை தொடர்பில் தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால், அந்த பகுதியில் ஏற்கனவே பதற்ற நிலையில் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]