தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகம் மற்றும் பிரதேச இணைப்பாளர்களுக்கான கலந்துரையாடல்!!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் நிர்வாகம் மற்றும் பிரதேச இணைப்பாளர்களுக்கான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (04) மட்டக்களப்பு அலுவலகத்தில் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், சிரேஸ்ட உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா மற்றும் இளைஞர் அணியின் உபதலைவர் வி.பூபாலராஜா, செயலாளர் ந.துஸ்யனதன், பொருளாளர் பா.தீபாகரன், உபசெயலாளர் க.சசீந்திரன் மற்றும் செயற்குழு, நிருவாகக் குழு உறுப்பினர்கள், பிரதேச இணைப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

2018ம் ஆண்டுக்கான முதலாவது ஒன்றுகூடலாக இது அமைந்ததுடன், இதன் போது நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நிலைமை, கட்சியின் மாவட்ட ரீதியான எதிர்கால செயற்பாடுகள், மாவட்டத்திலுள்ள பிரச்சினைகள் அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், இளைஞர் அணியின் எதிர்காலச் செயற்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]