தமிழ் அரசியல் தலைவர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

தமிழ் அரசியல் தலைவர்களுக்கு

தமிழ் அரசியல் தலைவர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

தமிழ் அரசியல் தலைவர்கள் தமக்கிடையேயான பிளவுகளை கைவிட்டு நிலைபேறான அரசியல் தீர்விற்கு பாடுபட புத்தாண்டில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஆங்கில புத்தாண்டு செய்தியில், “எம்மிடையே காணப்படும் விரோத உணர்வுகள் அனைத்தும் களையவும் அரசியற் தலைமைகள் தமக்குள் போட்டிப்போட்டுக்கொண்டு வேறுபட்ட கருத்துக்கள் வெளியிடுவதை தவிர்க்கவும் முன்வரவேண்டும்” என முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், புதிய ஆண்டு அனைவருக்கும் சுபீட்சத்தையும் சுகவாழ்வையும் மனஅமைதியையும் கிடைக்க பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]