தமிழ் அரசியல் கைதிகள் மூவர் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில்

அரசியல் கைதிகள் விடயத்தில்தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் உறுதியும், இறுதியுமான நடவடிக்கை அவசியம் என வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கோரியுள்ளார்.

நேற்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றின் மூலமாக அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் பொய் வாக்குறுதிகளை வழங்கி காலம் கடத்துவதைக் கைவிட்டு இலங்கை அரசாங்கம் இனியாவது உறுதியும், இறுதியுமான நடவடிக்கையினை எடுப்பது அவசியமாகும்.

வவுனியா நீதிமன்றத்திலேயே குறிப்பாக தமிழ் பகுதிகளில் தமது வழக்கு நடவடிக்கைகள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசியல் கைதிகள் மூவர் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.