சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிக்கை

 

 

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிக்கை.

தமிழ் அரசியல் கைதிகளைசிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் மனிதாபிமான கோரிக்கைகளை நிறைவேற்றி, விடுவிக்க ஐனாதிபதி, பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு மாகாண சபையின் 107 ஆவது அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை கைதடியில் நடைபெற்று வருகின்றது.

இதன் போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களது வழக்குகளை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், ஆகவே அவர்களது வழக்குகளை வேறு இடங்களுக்கு மாற்றுவதனைத் தவிர்த்து அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென அவைத் தலைவர. சிவஞானம் விசேட பிரேரனையைக் கொண்டு வந்துருந்தார்.

இதனைத் தொடர்ந்து சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு அனைவரதும் ஆதரவுடன் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தீர்மானத்தை உடனடியாக ஐனாதிபதி பிரதமர் சிறைச்சாலை அமைச்சர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]