தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

தமது விடுதலையை விலயுறுத்தி இன்று எட்டாவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலைய்திற்கு முன்பாக இடம்பெற்றது

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசும் தமிழ் தரப்பு பிரதிநிதிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.

தமிழ் அரசியல் தமிழ் அரசியல்

அத்துடன் குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பையோ அல்லது குறுகிய கால புனர்வாழ்வினை வழங்கியோ விரைவில் இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இன்றைய போராடடத்தில் வலியுறுத்தப்பட்டது-குரல்கள்-

இந்த விடயம் தாமதிக்கப்படும் பட்சத்தில் வடமாகாணம் தளுவிய போராட்டங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தனர்-குரல்கள்-

உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]