தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் இருந்து அநுராதபுரம் நோக்கிய நடைபவனி மேற்கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிய நடைபவனி ஒன்றை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாட்டின் மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்ணன் மேனன் தலைமையில் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள பரமேஸ்வரா ஆலயத்திற்கு முன்பாக இந்த நடைபவனி இன்று காலை (09) ஆரம்பமானது.

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையான குறைந்தகால புனர்வாழ்வு என்பதை அரசு கவனத்தில் கொண்டு அவர்களின் விடுதலையினை துரிதப்படுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்து சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடைபவனியானது கிளிநொச்சி வவுனியா ஊடாக அநுராதபுரம் நோக்கி சென்று சிறைச்சாலையில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]