தமிழ் அர­சி­யல் கைதி­களை எந்­த­வித தாம­த­மு­மின்றி உடன் விடு­தலை செய்­யு­மாறு வலி­யு­றுத்­த வுள்­ளார்- சம்­பந்­தன்

தமிழ் அர­சி­யல் கைதி­களைதமிழ் அர­சி­யல் கைதி­களை எந்­த­வித தாம­த­மு­மின்றி உடன் விடு­தலை செய்­யு­மாறு சபை ஒத்­தி­வைப்­புப் பிரே­ரணை மூல­மாக நாடா­ளு­மன்­றத்­தில் இன்று எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் வலி­யு­றுத்­த­வுள்­ளார்.

நாடா­ளு­மன்­றத்­தில் இன்று மாலை ஒத்­தி­வைப்பு வேளை­யில் தான் சமர்ப்­பித்து உரை­யாற்­ற­வுள்ள பிரே­ரணை தொடர்­பில் இரா.சம்­பந்­தன். நேற்று அறிக்கை விடுத்­தார்.அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் இதே விட­யத்தை வலி­யு­றுத்தி எழு­திய கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்ள விட­யங்­களை அப்­ப­டியே இதில் தெரி­வித்­துள்­ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சில வழக்­கு­கள் வவு­னி­யா­வில் இருந்து அநு­ரா­த­பு­ரத்துக்கு இட­மாற்­றப்­பட்­ட­தன் மூலம் தேவை­யற்ற முரண்­பா­டு­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. சாட்­சி­க­ளுக்­குப் பாது­காப்பு அவ­சி­ய­மா­யின் வழக்­கு­களை இட­மாற்­றம் செய்­யா­மல், சாட்­சி­க­ளுக்­கான பாது­காப்­புக்­களை வழங்­கி­யி­ருக்க முடி­யும்.

குற்­றஞ்­சாட்­டப்­பட்ட கைதி­கள் வடக்கு -– கிழக்­கைச் சேர்ந்த தமிழ்­மொழி பேசு­ப­வர்­கள் என்­ப­து­டன் மற்ற நிர்­வாக அல்­லது நீதி­மன்­றப் பாவ­னை­யில் உள்ள சிங்­களமொழியில் பாண்­டித்­தி­யம் இல்­லா­த­வர்­க­ளாக இருக்­கின்ற அதே­வேளை, தமிழ்­மொ­ழிப் பாவ­னை­யில் உள்ள வவு­னியா நீதி­மன்­றத் தில் இருந்து சிங்­கள மொழிப் பாவ­னை­யில் உள்ள அநு­தா­ர­புர நீதி­மன்­றத்துக்கு அவர் க­ளு­டைய வழக்­கு­கள் மாற்­றப்­ப­டு­கின்­ற­போது, அவர்­க­ளால் புரிந்­து­கொள்­ளக்­கூ­டிய மொழி­யில் வழக்­கு­கள் விசா­ரிக்­கப்ப­டு­வ­தற் கான அர­ச­மைப்பு ரீதி­யான அவர்­க­ளது உரி­மை­கள் மறுக்­கப்ப­டு­கின்­றன.

ஒரு குற்­ற­வி­யல் வழக்­கில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­ வ­ரின் உரிமை என்­பது அடிப்­ப­டை­யா­னது. அவ­ருக்­கெ­தி­ராக முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள வழக்­கை­யும், சாட்­சி­யங்­க­ளை­யும் முழு­மை­யா­கக் கேட்­ப­தற்­கும் அறிந்து கொள்­வ­தற்­கும் அவ­ருக்­கு முழு உரிமை உள்­ளது.
இவ்­வா­றாக வழக்கு இடம் மாற்­றப்­ப­டு­வ­ தா­னது குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வ­ருக்குத் தனது விருப்­பத்­தின் அடிப்­ப­டை­யில் சட்ட உத­வி­ க­ளைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான உரிமை மறுக்­கப்­ப­டு­கின்ற அதே­வேளை, இது உள்­ள ­டங்­க­லான ஏனைய அம்­சங்­க­ளும் நீதி­யான ஒரு விசா­ரணை இடம்­பெ­று­வ­தை மறு­த­லிப்­ப­தாக அமை­யும்.

முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள இந்த வழக்கு இட­மாற்­ற­மா­னது குற்­றஞ்­சாட்­டப்­பட்ட நப­ரது அடிப்­படை உரிமை சம்­பந்­த­மாக எந்­த­வொரு அவ­தா­னிப்­பை­யும் கருத்­திற்­கொள்­ள­ வில்லை என்­ப­தையே பிர­தி­ப­லிக்­கின்­றது.

இட­மாற்­றத்துக்கு எதி­ராகக் கைதி­கள் தொடர்ச்­சி­யாக உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­றார்­கள். இந்த நில­மை ­யா­னது அவ­ச­ர­மான அடிப்­ப­டை­யில் கையா­ளப்­படவேண்­டி­ய­தா­கும்.

மேற்­கு­றிப்­பிட்ட கார­ணங்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு இந்தக் கைதி­கள் எவ்­வித தாம­த­மு­மின்றி விடு­விக்­கப்­படவேண்­டும் என்­பதை நான் மிக ஆணித்­த­ர­மாக வலி­யு­றுத்த விரும்­பு­கின்­றேன் என்­றுள்­ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]