தமிழ்மொழி மூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தினால் பாடசாலைகளில் நிலவும் தமிழ்மொழி மூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

பட்டதாரிகள், உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா, வர்த்தகத்துறை டிப்ளோமா ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் இந்த ஆசிரியர் சேவைக்காக விண்ணப்பிக்க முடியும்.
சாதாரண தரத்தில் ஆரம்பப் பிரிவு, இஸ்லாம், இந்துசமயம், விவசாயம் மற்றும் உணவு தொழில்நுட்பம், கணிதம், சித்திரம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், வரலாறு ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

உயர்தரத்தில் இரசாயனம், பௌதீகம், உயிரியல், இணைந்த கணிதம், அரசியல் விஞ்ஞானம், புவியியல், கணக்கியல், வணிகம் ஆகிய துறைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

விண்ணப்பதாரிகள் 18 வயதிற்கும்இ 45 வயதிற்கும் இடைப்பட்டவர்களாக இருப்பது அவசியமாகும். விண்ணப்பங்கள் எதிர்வரும் 27ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் .