தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களுக்கு ஆதரவாகவே செயற்படும் : சீனித்தம்பி யோகேஸ்வரன்

மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் இடமளிக்காது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

உறுகாமம் நீர்ப்பாசனத் திட்டத்திலுள்ள வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தினை தனியாகப் பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கட்கிழமை (07) செங்கலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

வாகனேரி நீர்ப்பாசன திட்டத்தினைப் பிரிப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து இராஜாங்க அமைச்சர் அமீர்அலியுடன் கலந்துரையாடினேன். அவர் விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்படுவதாக கூறினார் பாராளுமன்ற அமர்வு முடிவடைந்தது அனைவரும் கலந்துரையாடி பிரச்சினைக்கு தீர்வு காண்போம்.

யாராக இருந்தாலும் பிரச்சினை ஏற்படும் போது பேசித் தீக்க வேண்டும். பேசுவதில் நியாயமான தீர்வு கிடைக்கவில்லையாயின் வீதிக்கு இறங்கி போராடலாம்.

வங்குரொத்து அரசியல் செய்பவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த பிரதேசத்தில செயற்படுகிறார்கள்.

மக்களின் பிரச்சினை தொடர்பான ஆர்ப்பாட்டத்திற்கு வந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக கோசமிட முயன்றால். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஒன்று திரட்டி அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் நிலை ஏற்படும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய கருணாவிற்க அருகதை இல்லை. நீங்கள் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் என்பதை மறந்து செயற்படுகிறீர்கள். மஹிந்த ராஜபக்ஷவின் அரவணைப்பில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்.

நீதிக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் நீங்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது உங்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.

எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தே நாங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]