தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தனது தீர்மானம் இன்று முற்பகல் தெரியும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், அது குறித்த தமது நிலைப்பாடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று முற்பகல் தெரிவிக்கும் என்று அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதா அல்லது எதிராக வாக்களிப்பதா என்பது கூறித்து கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கு இடையில் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

நேற்று நள்ளிரவு இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இதனையடுத்து, இறுதி முடிவு எடுப்பது இன்று முற்பகல்வரை ஒத்திவைக்கப்பட்டதுடன், கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் வெவ்வேறு நிலைப்பாட்டில் உள்ளதால் தீர்மானமிக்க ஒரு நிலைப்பாட்டுக்கு வரமுடியவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]