தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாழில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தனர்

யாழ்ப்பாணம்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாழ் மாவட்டம் முழுவதிலுமுள்ள உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தனர்.

யாழ் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகரசபை மூன்று நகரசபை பன்னிரெண்டு பிரதேச சபைகளிற்கான வேட்பு மனுக்களையே இவர்கள் இன்று கையளித்தனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரைபாதம் சரவணபவன், உள்ளிட்டவர்கள் இணைந்து இவ் வேட்புமனுக்களை இன்று காலை யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]