தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழர்களிடமிருந்து அந்நியப்படுத்த அரசு முயற்சி சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழர்களிடமிருந்து அந்நியப்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 சிவசக்தி ஆனந்தன்
சிவசக்தி ஆனந்தன்

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இன்னும் தீர்வை வழங்கவில்லை.

காணாமல் போனவர்களின் உறவுகளை கண்டு பிடித்து தருமாறு கோரி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கில் போராடுபவர்கள் தமிழ் மக்கள் என்ற காரணத்தால் அரசாங்கம் அவர்களின் போராட்டத்தை உதாசீனம் செய்கிறது.

தெற்கில் பெண்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டால் அரசாங்கம் அலட்சியத்துடன் செயற்படுமா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை காரணம் காட்டி அரசாங்கம் தமிழ் மக்களை நடு வீதியில் விட்டுள்ளது.

ஆயுத போராட்டம் அழிக்கப்பட்டது போன்று தமிழர்களின் ஜனநாயக கட்டமைப்பையும் அழிப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை. அவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லை என மக்கள் மத்தியில் நம்பகத் தன்மையை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]