தமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்த்த இயக்குநர் மகேந்திரன் காலமானார்

தமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்த்த முக்கியமான இயக்குநர் மகேந்திரன். அவர் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன் சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல் 2,2019) காலை காலமானார். அவருக்கு வயது 79.

எதார்த்தமான படங்களைக் கொடுத்து சிறந்த இயக்குநர் எனப் பெயர் பெற்ற இயக்குநர் மகேந்திரன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் படம் மூலம் அறிமுகம் ஆனவர்.

தொடர்ந்து உதிரிப் பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட தமிழ்த்திரையுலகில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை இயக்கியவர்.

விஜய் நடித்த தெறி உட்பட சில படங்களில் நடித்தும் பெரிய பாராட்டுகளைப் பெற்றார்.

தமிழ் திரைப்படத் துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான மகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதற்காக அவ்வப்போது டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இந்தத் தகவலை அவருடைய மகனும் திரைப்பட இயக்குநருமான ஜான்மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்திரையுலகின் பெருமை மறைந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]