தமிழீழ விடுதலைக்காக தன்னுயீர் நீத்த தியாகி பொன் சிவகுமாரனின் 44வது நினைவு தினம்

பொன் சிவகுமாரனின்

தமிழீழ விடுதலைக்காக தன்னுயீர் நீத்த தியாகி பொன் சிவகுமாரனின் 44வது நினைவு தினம் யாழில் வெகுசிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

பொன் சிவகுமாரன் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ்.உரும்பிராய் சந்திப் பகுதியில் உள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு முன்பாக இன்று ( 05 )நடைபெற்றது.

இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பிக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வினை சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரி பொது ஈகைச் சுடரினை ஏற்றி வைத்து அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன், அன்னாரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்; தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமசந்திரன், வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா உட்பட வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், பரம்சோதி, கே.சிவாஜிலிங்கம் மற்றும் முன்னாள் வடகிழக்கு மாகாண சபை முதல்வர் வரதராஜப்பெருமாள், சிறிரேலோவின் உறுப்பினர் செந்தூரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை தவிசாளார்கள், யாழ்.மாநகர பிரதி முதல்வர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் எனப்பலர் மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து, நினைவுப் பேருரைகளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க. சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் கேட்க.சிவாஜிலிங்கம், வரதராஜப் பெருமாள், எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா ஆகியோர் நினைவுப் பேருரைகளை ஆற்றினார்கள்.

பொன் சிவகுமாரனின் பொன் சிவகுமாரனின் பொன் சிவகுமாரனின் பொன் சிவகுமாரனின் பொன் சிவகுமாரனின் பொன் சிவகுமாரனின் பொன் சிவகுமாரனின்பொன் சிவகுமாரனின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]