முகப்பு Cinema தமிழில் ட்வீட் செய்து அசத்திய சன்னி லியோன்

தமிழில் ட்வீட் செய்து அசத்திய சன்னி லியோன்

அடல்ட்ஸ் ஒன்லி திரைப்படங்கள் மற்றும் பார்ன் விடியோக்கள் மூலமாக பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்த சன்னி லியோன் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு படமாகியுள்ளது. கரஞ்சித் கவுர் என்ற தனது இயற்பெயரை தலைப்பாகக் கொண்டிருக்கும் இப்படத்தை இயக்குநர் ஆதித்யா தத் இயக்கியுள்ளார். இப்படம் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. மேலும் இப்படம் வெப் சீரிஸாகவும் வெளி வருகிறது.

தமிழில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், நடிகை சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம். தமிழ் உள்படப் பல மொழிகளிலும் என் கதை சொல்லப்படுகிறது. நான் மிகவும் ஆவலாக உள்ளேன். இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன் என சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com