தமிழில் காஜல், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா

தமிழில் காஜல்
மஞ்சிமா

இந்தியில் வெளியான குயின் தமிழில் பாரீஸ் பாரீஸ் என்ற பெயரில் ரீமேக்காகிறது. 2014ம் ஆண்டு இந்தியில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவான குயின் தமிழில் தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாக உள்ளது. இந்தப் படத்திற்கு தமிழில் பாரீஸ் பாரீஸ் என்று பெயர் வைத்துள்ளனர். குயின் படத்தை தமிழில் சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத, ரேவதி இயக்குவதாக இருந்தது. ஆனால், தற்போது ரமேஷ் அரவிந்த் இயக்கவுள்ளார். இதன் படத்துவக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. குயின் படத்தின் கதையை அப்படியே தென்னிந்திய கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு மாற்றி உருவாக்க உள்ளனர்.

தமிழில் காஜல்

இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா நடிக்க உள்ளார். இதற்கான போட்டோ ஷுட் சமீபத்தில் முடித்துவிட்டார். இதே போல மலையாள ரீமேக்கில் மஞ்சிமா மோகன் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.