தமிழில் அடுத்தடுத்து படங்கள் நடிக்கவுள்ள அதிதி ராவ்

தமிழில் அடுத்தடுத்து படங்கள் நடிக்கவுள்ள அதிதி ராவ்

இயக்குனர் மணிரத்னத்தின் இரண்டு படங்களில் அடுத்தடுத்து நடித்தவர் நடிகை அதிதி ராவ்.

இவர் மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். அதன் பின்னர் தற்போது வெளியாகியுள்ள ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் அரவிந்த சாமியின் காதலியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்ற நிலையில், தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துவருகிறார்.

அதைத் தொடர்ந்து தனுஷுடன் இணைந்து புதிய இருமொழிப் படத்தில் நடிக்கவுள்ளார். தமிழைப்போலவே தெலுங்கிலும் தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

சம்மோஹனம் படத்தில் தெலுங்கில் அறிமுகமான அதிதி ராவ் தற்போது தேசியவிருது பெற்ற சங்கல்ப் ரெட்டி இயக்கத்தில் அண்டரிக்ஷம் படத்தில் நடிக்கிறார்.

இதன் மூலம் அதிதி ராவ் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]