தமிழினத்தின் காவலனாக மாறிய சுமந்திரன்! யாழில் மகத்தான வரவேற்பு!!

தமிழினத்தின் காவலனே வருக வருக” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிர் எம். சுமந்திரனிற்கு பருத்தித்துறையில் மிக பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற விழாவும் இடம்பெற்றது.

வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (16) மதியம் 3.30 மணியளவில் பருத்தித்துறை நகரில் இருந்து வரவேற்கப்பட்டு, மெத்தக் கடை சிவன் கோவில் பகுதியில் பாராட்டு விழா இடம்பெற்றது.

பருத்தித்துறை நகரப் பகுதியில் சுமந்திரன் வரவேற்கபட்டு பொன்னாடை போர்த்தியும் மலர் மாலை அணிவித்தும் வடமராட்சி பொது அமைப்பினர்கள் மற்றும் இளைஞர்களினால் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க மேளதாளங்களுடன் வடமராட்சி பருத்தித்துறை நகரிலிருந்து ஊர்வலமாக நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இந் நிகழ்வில், மத தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]rsaltamil.com