சத்தமே இல்லாமல் சென்னையில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் திருமணம்

hip hop tamizha wedding

இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இப்பாதுதான் தெரிய வந்துள்ளது, அவருக்கு நடந்தது நிச்சயதார்த்தம் இல்லை திருமணமே முடிந்துவிட்டதாகவும் தெரிகிறது.ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆதிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகக் கூறி புகைப்படங்கள் வெளியானது. அது நிச்சயதார்த்தம் இல்லை திருமணமே முடிந்துவிட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. சத்தமே இல்லாமல் சென்னையில் ஆதியின் திருமணம் நடந்துள்ளது. திருமண புகைப்படத்தை ட்விட்டிரில் வெளியிட்டுள்ளார் ஆதி. நேற்று தான் அவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது கணவர் சுந்தர். சி. மற்றும் மகள்களுடன் ஆதியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் குஷ்பு.

ஆதிக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்பதை அறிந்தே ரசிகைகள் ஷாக் ஆகினர். இந்நிலையில் திருமணமே நடந்துவிட்டது என்று கூறுவது ரசிகைகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். ஆதி தற்போது இதனை ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உங்கள் வாழ்த்துக்களோடு எங்கள் பயணம் இனிதே ஆரம்பம் என்று ட்வீட் செய்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]