தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை தடுப்பதற்கு நல்லாட்சி அரசாங்கமும் தவறியுள்ளது : யஸ்மின் சூக்கா குற்றசாட்டு

தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை தடுப்பதற்கு நல்லாட்சி அரசாங்கமும் தவறியுள்ளதாக உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்திட்டம் குற்றம் சாட்டியுள்ளது.

அரசின் சித்திரவதைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் குறித்த திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று 30 மாதங்கள் கடந்த நிலையிலும் தமிழர்கள் கடத்தப்படுதல், சித்திரவதைகள் என்பன ஓய்ந்ததாக இல்லை. இராணுவ முகாம்களில் உள்ள சித்திரவதை கூடங்களில் குடிவரவு மோசடிகள், மனிதக்கடத்தல்கள், அச்சுறுத்தி பணம் பறித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்வதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் சித்திரவதைக்குள்ளான 57 தமிழர்களின் விபரங்கள் தம்மிடம் காணப்படுவதாகவும், அவர்களில் 24 பேர் கடந்த 2016 மற்றும் இந்த வருடத்தில் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த சம்பவங்கள் தொடர்பில் எந்தவொரு சந்தேகநபரும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]