தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்கின்றன – அல்- ஜசீரா

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னமும் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்வதாக அல்- ஜசீரா தொலைக்காட்சி புதிய ஆதாரங்களை முன்வைத்துள்ளது.

தற்போதைய ஆட்சிக்காலத்தில் சித்திரவதை செய்யப்பட்ட தமிழர்களின் புதிய காணொளி சாட்சியங்களுடன் அல்- ஜசீரா இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரும் தமிழர்கள் சித்திரவதைகளை எதிர்கொள்வதாக இந்த காணொளி பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதில் இலங்கை படைகளின் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்களின் நேரடிச் சாட்சியங்களும் இடம்பெற்றுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]