தமிழரசுக் கட்சி – ஜனநாயகப் போராளிகள் கட்சி இணைந்து போட்டி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து, ஜனநாயகப் போராளிகள் கட்சி உள்ளூராட்சித் தேர்தலில், போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசுக் கட்சியின் இணைச்செயலரும், வடமாகாணசபை அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர்களுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டணியின் மூன்று பங்காளிக் கட்சிகளுக்கிடையில் பகிரப்பட்ட ஆசனங்களில், தமிழ் அரசுக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குள், ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]