தமிழரசுக் கட்சியின் தான்தோன்றித்தனத்திற்கு எதிராக அணிதிரளுமாறு சிவசக்தி ஆனந்தன் அழைப்பு

தமிழரசுக் கட்சியின் தான்தோன்றித்தனத்திற்கு எதிராக அணிதிரளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் இந்த செயற்பாட்டைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டம் இடம்பெற்ற நிலையில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் அவசர கலந்துரையாடல் வன்னியில் மேகொள்ளப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மாகாண அமைச்சர்களது செயற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சரின் நடவடிக்கைக்கு பிற்பாடு, அரசாங்க கட்சிகளுடன் இணைந்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சரைப் பதவி நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமையானது வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனடிப்படையிலேயே வவுனியாவில் உள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் அவசர கலந்துரையாடலை நடத்தியதுடன்,

முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை தமிழரசுக்கட்சி உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதுடன்,

தமிழரசுக் கட்சியின்

அரச சார்பு கட்சிகளுடன் இணைந்து முதலமைச்சரை பதவிநீக்கும் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாகவும், இது குறித்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவதாக குறித்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றபோதிலும், ஏனைய பங்காளிக் கட்சிகளது கருத்துக்களைக் கேட்காது, அவர்களது சம்மதமின்றி முதலமைச்சரை பதவிநீ”க்கும் செயற்பாட்டை முன்னெடுத்திருப்பதானது சர்வாதிகாரத் தனமே என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]