தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும்

இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ள 27 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யாவிட்டால், கச்சதீவில் குடியேறும் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்ட 27 தமிழக மீனவர்களும் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிக காரியாலயம் முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]