தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிப்பு? வடபகுதி மீனவ சங்கங்களுடன் மீன்வள அமைச்சு கலந்துரையாடல்

2015 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் பேச்சுகள் நடைபெற்றதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து தொடர்ச்சியாக தமிழகம் மற்றும் இந்திய அரசால் விடுவிக்கப்பட்டு கோரிக்கை தொடர்பில் வடமாகாண மீன சங்கங்கள் மீன்வள அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தச் பேச்சுகளில் இந்திய இழுவைப் படகுகளை விடுவிக்குமாறு வடபகுதியில் மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

 மஹிந்த அமரவீர
மஹிந்த அமரவீர

இந்நிலையில், எதிர்வரும் 6 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் வட பகுதி மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுடான இறுதி பேச்சுவார்த்தையின் பின்னர் படகுகளை விடுவிப்பது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

எவ்வாறாயினும் இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பதற்கு தாம் இணக்கம் தெரிவிக்கவில்லை. வட பகுதி மீனவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வட மாகாண கடற்றொழில் இணையத்தின் தலைவரும் மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தின் உப தலைவருமான நூர் மொஹமட் மொஹமட் ஆலம் கூறியுள்ளார்.

இந்திய மீனவர்களின் 130 இழுவைப் படகுகள் உள்ளது. அவற்றில் 43 படகுகள் 2015 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டவையாக உள்ளன. இழுவைப் படகுகளை விடுப்பதாயின் மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் அந்த படகுகள் அத்துமீறமாட்டாது என்ற உறுதிமொழி இந்திய அரசாங்கம் கொடுக்கும் பட்சத்திலேயே மேற்படி தீர்மானத்திற்கு இணங்குவோம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]