முகப்பு News India தமிழக அரசாங்கத்தின் அதிரடி வீட்டுத்திட்டம்

தமிழக அரசாங்கத்தின் அதிரடி வீட்டுத்திட்டம்

இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டு தமிழகத்தில் வசிக்கின்றவர்களுக்கான வீட்டுத்திட்டம் ஒன்றை தமிழக அரசாங்கம் அமுலாக்கவுள்ளது.
இதன்கீழ் முதற்கட்டமாக 1000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக த ஹிந்து தெரிவித்துள்ளது.
குறித்த வீடுகள் அனைத்தும் சூரிய மின்சக்தி வசதி ஏற்படுத்தப்பட்டதாக அமையவுள்ளன.
தமிழகம் நீலகிரி மாவட்டத்தில் மாத்திரம் இலங்கையில் இருந்து திரும்பிச் சென்ற 65 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வசிக்கின்றனர்.
அவர்கள் அங்குள்ள பெருந்தோட்டங்களில் பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டு வசதிகள் இல்லாது இருந்த நிலையில், தற்போது அவர்களுக்கான வீட்டுத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.
இதற்கான யோசனையை தமிழகத்தின் மறுவாழ்வு பணிப்பாளர் டினேஸ் பொன்ராஜ் ஒலிவர் கடந்த மே மாதம் 2ம் திகதி முன்வைத்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com