தமிழகத்தில் மார்ச்-1 முதல் பெப்சி, கோக் விற்கப்படாது!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, “இனிமேல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களைக் குடிக்க மாட்டோம்” என்று இளைஞர்கள் அறிவித்தனர். இளைஞர்களின் இம்முடிவு சமூக வலைத்தளங்களிலும் பரவியது.  இந்நிலையில், இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா விழுப்புரத்தில் அளித்த பேட்டியில், “மார்ச் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது. உடலுக்குத் தீங்கு விளைவிப்பதால் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.