தமிழகத்திற்குள் வரக்கூடாது நடிகை நமீதாவுக்கு மிரட்டல்

தமிழகத்திற்குள் வரக்கூடாது என, நடிகை நமீதாவுக்கு ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனியார், டிவி நடத்தி வரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, நடிகைகள் நமீதாவும், ஓவியாவும் வெளியேறி உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நமீதா, இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று உள்ளார். அங்கு, எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.


அதைப்பார்த்த ரசிகர்கள் பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் நடந்து கொண்ட விதம் ஏற்புடையது அல்ல அங்கேயே இருந்து விடுங்கள்.

மீண்டும் தமிழகம் பக்கம் வந்து விட வேண்டாம் என எச்சரிக்கும் வகையில் பதிவு செய்து உள்ளனர்.இது போன்ற நடவடிக்கைகளில் ரசிகர்கள் யாரும் ஈடுபடக்கூடாது என ஏற்கனவே நடிகர் கமல் எச்சரித்துள்ளார். அதையும் மீறி பிக்பாஸ் பிரபலங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]