தப்பியோடிய இரண்டு கைதிகளில் ஒருவர் கைது

மட்டக்களப்பில் தப்பி சென்ற இரண்டு கைதிகளில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்படும் போது, குறித்த இரண்டு கைதிகளும் நேற்று தப்பிச்சென்றிருந்தனர்.
இவர்கள் இருவரும் போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் ஓட்டமாவடி பிரதேசத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் இருவரும் வாழைச்சேனை பொலிஸாரால், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அதனையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதனையடுத்து, சிறைச்சாலை வாகனத்தில் ஏற்ற தயாரானபோது குறித்த இரு கைதிகளும் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், தப்பி ஓடிய கைதிகளில் ஒருவர் அந்தப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]