முகப்பு News Local News தப்பிச் சென்ற நான்கு கைதிகளில் இருவர் கைது

தப்பிச் சென்ற நான்கு கைதிகளில் இருவர் கைது

Arrested man in handcuffs with hands behind back

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற சிறையில் இருந்து தப்பிச் சென்ற நான்கு கைதிகளில் இரண்டு பேர் கைதாகியுள்ளனர்.

செல்வப்புரம் பகுதிக்கு அருகில் உள்ள வனம் ஒன்றில் மறைந்திருந்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நான்கு பேரும் பல்வேறு களவாடல் சம்பவங்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்வதற்காக அவர்கள் நீதிமன்ற சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில், அதில் இருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

தலைமறைவாகியுள்ள ஏனைய இரண்டு கைதிகளும் தொடர்ந்து தேடப்படுகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com