தபால் வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கு கால எல்லை நீடிப்பு

தபால் வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கு கால எல்லை நீடிப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் அறிவித்துள்ளார்.

93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள், கடந்த நவம்பர் 28ஆம் திகதி கோரப்பட்டது.

அத்துடன், ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் டிசெம்பர் 4ஆம் திதிக, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மொத்தமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளுக்குமான தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக கால எல்லையை டிசெம்பர் 22 ஆம் திகதி வரை நீடித்திருப்பதாக  மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.