தபால் மூலம் வாக்களிக்கத் தவறினால் கட்டணம் அறவிடப்படும்

தபால் மூலம் வாக்களிக்கத்

தபால் மூல வாக்குக்காக மாத்திரம் 750.00 ரூபாய் செலவிடுவதாகவும், தபால் மூலம் வாக்களிக்கத் தவறுவது அரச பணத்தை துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கையாகும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

அதன்காரணமாக, தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றதன் பின்னர் வாக்களிக்காமல் இருந்த சகலரிடமிருந்தும் காரணம் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தபால் மூலம் வாக்கு வரம் பெற்றவர்கள் சமூகமளிக்காததன் காரணமாக அவர்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவி்த்தார்.

வாக்களிக்கத் தவறியவர்களிடம் காரணங்களை வினவியதன் பின்னர், அவர்கள் நியாயமான காரணங்களைச் சமர்ப்பிக்கத் தவறும் பட்சத்தில், தேர்தலுக்காக செலவிடப்பட்ட தொகை அவரிடமிருந்து அறவிடப்படும் எனவும் ஆணைக்குழு தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு இன்று (02) மட்டும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]