தபால் பிரச்சினைக்கு தீர்வு இல்லையேல் மீண்டும் போராட்டம் வெடிக்கும்! – அரசுக்கு தபால் தொழிற்சங்க சம்மேளனம் எச்சரிக்கை

புராதன தபாலகங்களை வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் யோசனையைக் கைவிடல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து தபால் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்திருந்த வேலைநிறுத்தம் அந்தப் பிரச்சினைகளுக்கு இரு வாரங்களில் தீர்வு வழங்கப்படுமென அரசு அளித்த எழுத்துமூல உறுதிமொழியின் அடிப்படையில் கைவிடப்பட்து.

எனினும், இருவார காலக்கெடு முடிவடையவுள்ளபோதிலும் இதுவரை அரச தரப்பிலிருந்து எவ்வித பதிலும் வராததால் தாங்கள் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் இறங்கவுள்ளதாக தபால் ஊழியர்கள் தொழிற்சங்க சம்மேளனம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

“ஏற்கனவே நாங்கள் இருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொண்டபோது தங்களது பிரச்சினைகளுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு வழங்கப்படுமென அரசு உறுதிமொழி வழங்கியதையடுத்து வேலைநிறுத்தம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. எனினும், அரசு வழக்கம்போல தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியுள்ளதால் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது” – என்று தபால் ஊழியர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]