தபால் தொழிற்சங்க முன்னணி கொழும்பில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பிரதான தொழிற்சங்கங்களை இணைத்துக் கொண்டு, கொழும்பில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னனி தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி இந்த மாபெரும் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த முன்னனி தெரிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 15வது நாளாகவும் தொடர்கின்றது.

இந்த நிலையில், கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாகிரக போராட்டத்தை சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டமாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைத்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.