தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் இன்று (04) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஹட்டன் தபால் திணைக்கள உத்தியோகத்தர்களும் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

5 வருடங்களாக நீடித்து வரும் அஞ்சல் சேவை தரம் 11 இற்கான நியமனங்களை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் மலையகத்தில் உள்ள தபால் திணைக்கள உத்தியோகத்தர்களும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]