சிறப்பு தபால் தலை வெளியீடு இடைநிறுத்தம்

தபால் தலை ரஷ்ய- இலங்கை இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 60 ஆவது ஆண்டை முன்னிட்டு, இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்படவிருந்த சிறப்பு தபால் தலை வெளியீடு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்த முத்திரையை இடைநிறுத்தி வைக்குமாறு வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியிருப்பதாக தபால் மா அதிபர் ரோகண அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை தேயிலைக்கு ரஷ்யா தற்காலிக தடையை விதித்துள்ள நிலையில், இருதரப்பு இராஜதந்திர உறவுகளில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ள நிலையில், சிறப்பு முத்திரை வெளியீடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கையுடன் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இரண்டு முத்திரைகளை ரஷ்யா கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]