தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு முஸ்தீபு

எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

12 வருட காலமாக இருக்கின்ற தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதிமொழி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர் எம்.கே. காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]