தபால் ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது மலையகத்தில் தபால் விநியோகம் தேக்கத்தில்

தபால் ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது மலையகத்தில் தபால் விநியோகம் தேக்கமடைந்துள்ளது.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியத்தல் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர்ச்சியான வேலை நிறுத்தப்போராட்டத்தால் மலையகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் தபால்கள் தேக்கமடைந்துள்ளன.
மூன்று அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் உள்ள தபால் ஊழியர்கள் 26ஆம் திகதி நள்ளிரவு முதல் மேற்படி வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நுவரெலியா, கண்டி, காலி ஆகிய தபாற் காரியலாயங்களை உல்லாசப் பயணத்துறைக்கு பயன்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கொழும்பு பிரதான தபால் காரியாலய கட்டடத்தில் மீண்டும் தபால் காரியாலயத்தை ஆரம்பிக்க வலியுறுத்தியும், ஊழியர் சட்ட மூலத்தை திருத்தி நடமுறைப்படுத்தாமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளன.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியத்தால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்து மலையகத்தில் நுவரெலியா, ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை ஆகிய பிரதான அஞ்சல் அலுவலகம் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்கள் போன்றவற்றில் கடமையாற்றுகின்ற பாணியாளர்கள் இரண்டாவது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]