தபால்மூல வாக்களிப்பு பட்டியல் கையளிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எதிர்வரும் 11 ஆம் திகதி அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி தேர்தல் அலுவலகங்கள், மாவட்டச் செயலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும், ஏனைய அரச நிறுவனங்களில் எதிர்வரும் 25ஆம், 26ஆம் திகதிகளிலும் அஞ்சல் மூல வாக்குகளை அளிக்க முடியும் என்றும், மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகமட் தெரிவித்துள்ளார்.

இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு 560,536 அரசாங்கப் பணியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்ற அரசாங்கப் பணியாளர்களின் பட்டியல்கள் நேற்று மாவட்ட தேர்தல் பணியகங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.