தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்த வைரமுத்து

சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டிற்கு வைரமுத்து தனது ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டை ட்விட்டரில் முன்வைத்துள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது பாலியல் ரீதியாக வைரமுத்து தன்னை அணுகியிருந்ததாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து சின்மயிக்கு ஆதரவாக பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் “உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்” என சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டிற்கு வைரமுத்து மறைமுக பதிலடி கொடுத்துள்ளார்.

”அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்“.

— வைரமுத்து (@vairamuthu) October 10, 2018

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]