தன் காதலியின் உறவினருக்கு பயந்து ஒளிந்த மாணவன் உயிரிழப்பு

தன் காதலியின் உறவினருக்கு பயந்து ஒளிந்த மாணவன் உயிரிழப்பு

தன் காதலியின்

காதலியின் உறவினர்கள் மீதான பயத்தால் கற்குவியல் ஒன்றுக்கு அருகில் மறைந்து இருந்த பாடசாலை மாணவன் ஒருவன் மீது கற்பாறை ஒன்று விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று பாதுக்கை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

பாதுக்கை, மீரியாகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய அரத்புலிகே ஜானக குமார என்ற மாவத்தகம வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காதலியுடன் விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளார். இதன்போது காதலியின் உறவினர்கள் அந்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதனையடுத்து அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்ற மாணவன், கற்குவியல் நிறைந்துள்ள காட்டுப்புதர் பகுதிக்கு சென்று மறைந்துள்ளான். இதன்போது மேலே இருந்த கற்பாறை ஒன்று மாணவன் மீது விழுந்ததையடுத்து மாணவன் உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்கை பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]