தன்னை ஏமாற்றிவிட்டதாக ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்த காதலன்

கோயம்புத்தூரை சேர்ந்த இமானுவேல் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்துகொண்ட காதலி ஏமாற்றிவிட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

பொறியியல் படித்துவிட்டு பெங்களூரில் பணியாற்றி வரும் இமானுவேல், சம்யுக்தா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும், 2016 ஆம் ஆண்டு குடும்பத்தினருக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். அதன்பின்னர், இருவரும் அவர்களது வீட்டில் தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், சம்யுக்தா தனது உறவுமுறை வேண்டாம் என கூறிவிட்டதாக இமானுவேல் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

அவளது நெற்றில் பொட்டு வைத்து தாலிகட்டினேன், இப்போ என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். அது தொடர்பான புகைப்படங்கள் என்னிடம் இருக்கிறது. அவரது குடும்பத்தார் என்னை மோசமாக அடித்தார்கள்.

எனக்கு அவளுடன் திருமணம் நடந்துவிட்டது, இனி யார் என்னை திருமணம் செய்துகொள்வார்கள் என கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]