தன்னைதானே செருப்பால் அடித்துக்கொண்ட ஸ்ரீ ரெட்டி – காரணம் தெரியுமா??

அந்த நடிகரை அண்ணா என்று அழைக்க வெட்கப்படுகிறேன் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் நபர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி. இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஸ்ரீ ரெட்டிக்கு அறிவுரை வழங்கினார். டிவிகளில் பேசாமல் போலீசாரிடம் புகார் அளிக்குமாறு கூறினார் பவன் கல்யாண்

பவன் கல்யாண் பவன் கல்யாண் எப்படி அப்படி பேசலாம்? அவரை அண்ணா என்று அழைக்கவே வெட்கப்படுகிறேன் என்று கூறிய ஸ்ரீ ரெட்டி தனது செருப்பை கழற்றி மீடியா கேமராக்கள் முன்பு தன்னை தானே அடித்துக் கொண்டார்.

திட்டு பவன் கல்யாண் பெயரை சொல்லி தனது நடுவிரலை வேறு காட்டினார் ஸ்ரீ ரெட்டி. மேலும் அர்ஜுன் ரெட்டி பட ஸ்டைலில் பவன் கல்யாணை கழுவிக் கழுவி ஊத்தினார். இதை பார்த்த பவன் கல்யாண் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

மீடியாக்கள் முன்பு பவன் கல்யாணை திட்டித் தீர்த்த ஸ்ரீ ரெட்டி ட்விட்டரில் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் நல்லவிதமாக பதில் அளித்த சில மணிநேரங்களில் பவன் கல்யாணை டிவியில் திட்டியுள்ளார் ஸ்ரீ ரெட்டி

ஸ்ரீ ரெட்டியின் பல்ட்டியை பார்த்த நெட்டிசன்களுக்கு அவர் பின்னால் இருந்து யாரோ அவரை இயக்குகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே ஒரு பெரிய பிரபலம் அவர் பின்னால் இருந்து இயக்குவதாக ஸ்ரீ லீக்ஸில் சிக்கிய பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]