தன்சானியாவில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 44 பேர் உயிரிழப்பு

தன்சானியாவில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 44 பேர் உயிரிழப்பு

தன்சானியா நாட்டில் உள்ள லேக் விக்டோரியா எனும் ஏரியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தான்சானியா நாட்டிலுள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொறு தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றதால் எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து 100-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்களில் 32 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

படகில் பயணம் செய்த மேலும் பலரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதோடு, உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே லேக் விக்டோரியா எனும் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியானது சுமார் 69 ஆயிரம் கிமீ பரப்பளவும் 272 அடி ஆழமும் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தன்சானியாவில் தன்சானியாவில் தன்சானியாவில் தன்சானியாவில் தன்சானியாவில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]