தன்சல் வழங்கும் இடங்களில் சோதனைகள ஆரம்பம்

தன்சல்

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தன்சல் நிலையங்களை சோதிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சோதனை நடவடிக்கைக்கைகளில் பொதுசுகாதார பரிசோதகர்கள் மூவாயிரம் பேர், ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

தன்சலாக வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து இதன்போது அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

விசேடமாக, குடி பானங்களை வழங்கும் போது, அதற்காக சுத்தமான குடிநீரை பயன்படுத்துமாறு அன்னதானம் வழங்குபவர்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் கூறியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]